Thursday 18 December 2014

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்

சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். 
அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். 
அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி
 பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு 
கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) 
தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் 
செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, 
கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) 
வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், 
வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு
 பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள்
 மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர
 உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது
 வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை 
தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில்
 மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். 
முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப.
- See more at: http://www.vivekaanandan.blogspot.in/#sthash.VhFRpBYI.dpuf

1 comment:

  1. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete