Sunday 24 August 2014

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்

ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.
பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.
பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.
ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.
ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.
மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

Photo: வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்

Friday 22 August 2014

அல்சரை தவிர்க்க

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்

Thursday 7 August 2014

பிறந்த ராசிகேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

பரணி (மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை
நல்லூர் (நாகப்பட்டிணம்) , ஸ்ரீபோகர், பழனி

கார்த்திகை1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி,
ஸ்ரீதணிகைமுனி, ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்
;ஸ்ரீபுலிப்பாணி, பழனி

கார்த்திகை2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி;
ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

மிருகசீரிடம்1, (ரிஷபம்) = சிவானந்த மவுனகுரு
யோகீஸ்வரர்

மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி &
ஸ்ரீரங்கம் ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை
& சங்கரன்கோவில்

மிருகசீரிடம்3 (மிதுனம்) = ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,
மருதமலை & சங்கரன்கோவில்

மிருகசீரிடம்4 (மிதுனம்) = அமிர்தகடேஸ்வரர்
ஆலயம், திருக்கடையூர்

திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் -
திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்,

புனர்பூசம்1, 2, 3 (மிதுனம்) = ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்) = ஸ்ரீதன்வந்திரி -
வைத்தீஸ்வரன்கோவில்

பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி - திருவாரூர்;
ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி - திருவாரூர் (மடப்புரம்)

ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர் - வடக்குப்பொய்
கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,
ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;
ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை,
பாபநாசம்.

மகம் (சிம்மம்) , பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,
அழகர்கோவில், மதுரைஅருகில்.

உத்திரம்1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில்,
மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம்2 (கன்னி) = ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா
- நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர்
கோவில்ஆனிலையப்பர் கோவில் - கருவூர்;
கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.

அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -
கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.

சித்திரை1, 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் - கரூர்
, ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை3, 4 (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர்
- மாயூரம்

சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர்
- மாயூரம்

விசாகம்1, 2, 3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர்
- காசி, ஸ்ரீகுதம்பைச்சித்தர் - மயிலாடுதுறை

விசாகம்4 (விருச்சிகம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர்
- மயிலாடுதுறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி,
ஸ்ரீஅழுகண்ணிசித்தர் - நீலாயதாட்சியம்மன்
கோவில், நாகப்பட்டிணம்

அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி,
தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம் - 621215.
திருச்சி மாவட்டம்.

கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி,
ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,
நாகப்பட்டிணம் அருகில்.

மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம்,
சேதுக்கரை, திருப்பட்டூர்

பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம்,
ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் - பனைக்குளம்
(இராமநாதபுரம்) , ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் - திருப்பதி,
ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்
(ராணிப்பேட்டை) , ஸ்ரீலஸ்ரீமவுன
குருசாமிகள் - தங்கால் பொன்னை
(வேலூர் மாவட்டம்)

உத்திராடம்2, 3, 4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர்
- திருப்பதி

திருவோணம் (மகரம்) = ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் -
நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார்
- கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்

அவிட்டம்1, 2 (மகரம்) ;அவிட்டம் 3, 4 (கும்பம்)
ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி
சந்நிதானம்)

சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.

பூரட்டாதி1, 2, 3 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி - திருவாரூர், ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர்கோவில், சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் - ஓமலூர் & பந்தனம்திட்டா.

பூரட்டாதி4 (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீ
ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி (மதுரை) ,
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர், ஓமலூர்.

உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் - மதுரை;ஆனந்த
நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி (மதுரை) , ஸ்ரீமச்சமுனி
- திருப்பரங்குன்றம்.

ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை,
திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர்
சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி